திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கிறது: பொள்ளாச்சி ஜெயராமன்

திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிக்கின்றனர் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தொகுதிக்குட்பட்ட குமரன் நகர், அன்பு நகர்,…

திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிக்கின்றனர் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தொகுதிக்குட்பட்ட குமரன் நகர், அன்பு நகர், ராமமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டு அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பகுதியில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதாகவும்,அரசு மருத்துவமனை விரிவாக்கம், மற்றும் அரசு கலைக்கல்லூரி பொள்ளாச்சி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கூறினார். மேலும் கடந்த ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பொள்ளாச்சி பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.