கே.ஜி.எப் திரைப்படத்தின் இயக்குநர் நடிகர் விஜயுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரைப்படம் ’கே .ஜி .எப் சாப்டர்- 1’ மூலம் பிரபலமான இயக்குநராக அறிப்பட்டவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது கேஜிஎப்-யின் இரண்டாவது பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இத்திரைபடம் வருகின்ற ஜூலை 16 ஆம் தேதி வெளியாகிறது. தற்போது அவர் சலார் என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ், நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இவரின் அடுத்த படம் நடிகர் விஜயுடன் அமைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தை பிபரல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும், இத்திரைப்படத்தைப் பற்றி நடிகர் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. கூடியவிரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூவ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. இத்திரைப்படம் விஜயின் 67 வது திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.







