Skip to content
December 23, 2025
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » people are watching pm modi kill democracy they will answer rahul gandhi
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“பிரதமர் மோடி ஜனநாயகத்தை கொலை செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்; அவர்கள் பதிலளிப்பார்கள்!” – ராகுல் காந்தி

‘பிரதமர் மோடி நீங்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு பதிலளிப்பார்கள்’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான…

Author Avatar

Web Editor

February 22, 20246:26 pm CBIfarmersFormer GovernorFreeze the bank accountGovernorinternet banmost prominent opposition partyMother of DemocracyMSPmurdered democracynews7 tamilNews7 Tamil Updatespublic will answersharp wiresSocial Mediasuppressingtear gas shellsyouth

‘பிரதமர் மோடி நீங்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு பதிலளிப்பார்கள்’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான தகவல்களை வெளியிடும் வலைதளக் கணக்குகளை முடக்குமாறு மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் எக்ஸ் தளத்தைக் கோரியிருந்தது. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் கணக்குகளை முடக்குவது சரியில்ல எனத் தெரிவித்து எக்ஸ் நிறுவனம் தனது தளத்தில் பதிவிட்டதைச் சுட்டிக்காடி பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தனது பதிவில் மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:

‘விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால், அவர்களைச் சுட்டுத் தள்ளுகிறீர்கள்! இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால் அவர்களுக்கு செவிசாய்க்க கூட மறுக்கிறீர்கள்! இதுதான் உங்கள் ஜனநாயகமா?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

‘முன்னாள் ஆளுநர் உண்மையை பேசினால் அவரது வீட்டில் சிபிஐ மூலம் சோதனை செய்கிறீர்கள், பிரதான எதிர்கட்சியின் வங்கிக்கணக்குகளை முடக்குகிறீர்கள், 144 தடை, இணைய சேவை முடக்கம், கூர்மையான வேலிகள், கண்ணீர் புகைக்குண்டுகள்! இதுதான் உங்கள் ஜனநாயகமா?’ ‘ஊடகங்களாக இருந்தாலும், சமூக வலைதளங்களாக இருந்தாலும் உண்மைக் குரல்களை அடக்குகிறீர்கள் இதுதான் உங்கள் ஜனநாயகமா?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

‘பிரதமர் மோடி நீங்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு பதிலளிப்பார்கள்’ என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!

By Web Editor December 23, 2025

“அதிமுகவில் இருந்து யார் விலகினாலும், எந்த ஒரு இழப்பும் இல்லை” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!

By Web Editor December 23, 2025

கடலோர தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு!

By Web Editor December 23, 2025

செவிலியர்கள் போராட்டம் ; 724 பேருக்கு மட்டும் பணி நிரந்தரம் என்பது பிரித்தாளும் சூழ்ச்சி – நயினார் நாகேந்திரன்….!

By Web Editor December 22, 2025
#ट्रेंडिंग हैशटैग:CBIfarmersFormer GovernorFreeze the bank accountGovernorinternet banmost prominent opposition partyMother of DemocracyMSPmurdered democracynews7 tamilNews7 Tamil Updatespublic will answersharp wiresSocial Mediasuppressingtear gas shellsyouth

Post navigation

Previous Previous post: பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது – சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
Next Next post: “விவசாயிகள் பயிர்களுக்கு நியாயமான விலை கேட்பது இந்த நாட்டில் அநியாயமா?” – நடிகர் கிஷோர் கேள்வி
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading