தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து வருகிறார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இந்த நிலையில் நடிகர் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் தனுஷின் 55வது படம் உருவாகி வருகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர் டேக் ஸ்டுடியோஸ் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஸ்ரீ லீலா, சாய் பல்லவி இணைந்து நடிக்கின்றனர். இப்படம் 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘ஓம் சாப்டர் 1 – உதிரம் : தி பிளட் வுட்’ என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.




