தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, திருச்சி, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, திருவள்ளூர், நாகப்பட்டினம், வேலூர், கோவை, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




