வாகனத்தைத் துரத்தியக் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்தப் பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா மலை கிராமத்திற்குச் செல்லும் வழியில் வாகனத்தைத் துரத்தியக் காட்டு யானையால் மலைக் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சுமார்…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்தப் பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா மலை கிராமத்திற்குச் செல்லும் வழியில் வாகனத்தைத் துரத்தியக் காட்டு யானையால் மலைக் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இவர்கள் எங்கு சென்றாலும் பவானிசாகர் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

தினசரி இரண்டு பஸ்கள் மட்டுமே சென்று வரும் நிலையில் இதைத்  தவிர விவசாய விலைப் பொருட்களான வாழை,  தட்டைக்கால் மற்றும் பல்வேறு மலர் வகைகளை எடுத்து வர சரக்கு வாகனங்கள் சென்று வருவது உண்டு.

இதையடுத்து நேற்று, ஒரு வாகனம் தெங்குமரகடா சென்று திரும்பியபோது பினிசி பள்ளம் அருகே நடமாடிய யானை ஒன்று திடீரென வாகனத்தைத் துரத்தியதால் வாகன ஒட்டி உடனடியாக வாகனத்தை வேகமாக  இயக்கி தப்பித்தனர். வாகனத்தில் இருந்தவர்கள் யானை துரத்துவதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

கா.ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.