ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்திய பின்பு கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழ்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன்
இன்று மாலை ஆலோசனை நடத்திய பின்பு கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழ் சங்கம் சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று பொங்கல் விழாவில் கலந்துகொள்ள ஓ பன்னீர்செல்வம் நேற்று அகமதாபாத் சென்று இருந்தார். அங்கு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஓ பன்னீர்செல்வம் விட்டுக் கொடுப்பவர்கள் யாரும் கெட்டுப் போவதில்லை என்பதற்கு குஜராத் வாழ் தமிழர்கள் தான் உதாரணம் என்று கூறினார்.

இதனையடுத்து, நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். ஏற்கனவே ஒ.பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பா.ஜ.க., த.மா.கா உள்பட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி இருந்தார். இந்த நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , இன்று மாலை தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்திய பின்பு மற்ற கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி கட்சியை சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரி வரும் நிலையில், இருவரில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று தெரியாமல் அதிமுக கூட்டணி கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.

பி. ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.