உலககெங்கும் 2026 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. உலகிலேயே முதல் நாடாக பசிபிக்கில் அமைந்துள்ள கிரிபாட்டி தீவில் 2026-ம் ஆண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 3.38 மணிக்கு கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்தது.
கிரிப்பாட்டியை தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை அடுத்து இந்தியாவில் புத்தாண்டு பிறந்தது.
இதனை யொட்டி இந்தியா முழுவதும் இரவு ஏராளமான மக்கள் வீதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
வழிபாட்டு ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன. புத்தாண்டு நிகழ்வையொட்டி சென்னை, மதுரை உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
நியூஸ் 7 தமிழ் சார்பாக அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!








