முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

`தமிழை புறக்கணித்து விட்டு ஜி20 மாநாட்டின் விளம்பர பதாகை’ – பாரதிதாசனின் பேரன் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் தமிழறிஞர்களான மகாகவி பாரதியார் மற்றும் பாரதிதாசன் வாழ்ந்த வீடுகளில் ஜி20 மாநாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளில் தமிழை புறக்கணித்து விட்டு இந்தி மற்றும் ஆங்கிலம் இடம்பெற்றுள்ளதற்கு பாரதிதாசன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜி20 நாடுகளின் ஓராண்டுக்காலத்  தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனிடையே ஆரம்பகட்ட மாநாடு வரும் 30 மற்றும் 31ந்தேதிகளில் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதற்காக புதுச்சேரி முழுவதும் விளம்பர பதாகைகளை அரசு வைத்துள்ளது. அந்த விளம்பர பதாகைகளில் ஹிந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ளதற்கு தமிழறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்த இல்லத்திலும், பெருமாள் கோயில் வீதியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த வீட்டிலும் புதுச்சேரி அரசு கலைப் பண்பாட்டுத்துறை ஜி20 மாநாடு குறித்த விளம்பர பதாகை வைத்துள்ளனர். அதில் ஆங்கிலமும் இந்தி மொழி மட்டுமே இடம்பெற்றுள்ளது. இருபெறும் தமிழறிஞர்கள் வாழ்ந்த வீடு அருங்காட்சியமாக உள்ள நிலையில் இங்கு வரும் தமிழர்களுக்கு புரியாத ஹிந்தி மொழியில் பதாகை வைத்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து பேசிய பாவேந்தர் பாரதிதாசனின் பேரனும் முன்னாள் அகில இந்திய வானொலி நிலைய இயக்குனரான செல்வம், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்  1939 லேயே இந்தி திணிப்பை எதிர்த்துப் பாடுகிறார். தொடர்ந்து மத்திய அரசின்  இந்தி திணிப்பை எதிர்த்தவர், அதேபோல் அவரது மகனும் எனது தந்தையுமான மன்னர் மன்னன் 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போரில் 48 நாட்கள் சிறையிலிருந்த வரலாற்றை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும் அவர்கள் வாழ்ந்த வீடாகவும், நினைவு  இல்லமாகவும் உள்ள அதன் வாயிலில் புதுவையில் நடைபெற உள்ள ஜி20 மாநாடு தொடர்பான புதுவை அரசுக்  கலை பண்பாட்டுத்துறை  விளம்பரத்தில் தமிழ் இல்லை. இந்தியும் ஆங்கிலமுமே இருப்பதை எப்படி ஏற்க முடியும் என்று தெரிவித்தார்.

மேலும், உலகில் எந்த மொழியையும் படிக்கலாம் ஆனால் தமிழை தவிர்த்து விடக்கூடாது என பாடிய மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டிலும் தமிழை தவிர்த்து இந்தி மொழி இடம்பெற்றுள்ளது வேதனைக்குறியது என்றும் ஆகவே இந்தி மொழித்திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பாரதிதாசன் நினைவு அருங்காட்சியக வாசலில் வைக்கப்பட்டுள்ள இந்தி,  ஆங்கில விளம்பரம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும், அதே போல் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டிலும் உள்ள தமிழ் அல்லாத பதாகைகளை அகற்ற வேண்டும், அவ்வாறு  புதுவை அரசு உடனே செய்யாவிடில்   தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களைத் திரட்டி மாபெரும் அறப் போராட்டம் அந்ந அருங்காட்சியகத்தின் முன்பு  நடைபெறும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘காதலுக்காக கடைசி வரை போராட வேண்டும்’ – நடிகை நஸ்ரியா

Arivazhagan Chinnasamy

தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது: உயர்நீதிமன்றம்

EZHILARASAN D

இந்திய மருத்துவ முறைகளின்படி புற்றுநோய்க்கு மருந்து: மத்திய அரசு முயற்சி

EZHILARASAN D