பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் 20 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்குவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் பிரேசில் அரசு ஒப்பந்தம் செய்தது. இருப்பினும், விரிவான பிரேசிலின் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் கோவாக்சின் இறக்குமதியில் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக கூறியது. அத்துடன் விரிவான விசாரணைக்கு பின்னரே தடுப்பூசி இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரேசிலுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதில் எந்த முறைகேடும் இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதில் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசி ஏற்றுமதி செய்வதற்காக பிரேசில் நாட்டில் இருந்து முன்பணம் எதுவும் பெறவில்லை என் தெரிவித்துள்ளது.







