முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் துணை நிற்கும் அரசு: முதலமைச்சர்

மக்களுக்காக மட்டும் அல்லாமல் மருத்துவர்களுக்கும் துணை நிற்கும் அரசாக இந்த அரசு இருக்கும் என மருத்துவர்கள் தின விழாவில் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை கிண்டி அரசு கொரோனா சிசிச்சை மையத்தில், கொரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து. 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மையத்தையும். ரிப்பன் வெட்டி முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது, அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழகத்தில் நடைபெற்ற, தேசிய மருத்துவர் தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்களின் பணியை போற்றும் வகையில், அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கினார்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு 100% தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்று திகழ செய்தமைக்காக அம்மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யாவிற்கு பாராட்டு சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதனை தொடர்ந்து மேடையில் பேசிய முதல்வர், மக்களுக்காக மட்டும் அல்லாமல் மருத்துவர்களுக்கும் துணை நிற்கும் அரசாக இந்த அரசு இருக்கும் என பெருமிதம் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றி உறுதி: அமத்ஷா பேச்சு

Jeba Arul Robinson

தமிழ்நாட்டில் புதிதாக 6,596 பேருக்கு கொரோனா!

Gayathri Venkatesan

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ள சிறப்பு ரயில்!

Gayathri Venkatesan