முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமருக்கு மாம்பழங்கள் அனுப்பிவைத்த மமதா!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார்.

மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மமதா. நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பிரச்சாரத்தில ஈடுபட்டார். மேலும் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடியும் மமதாவின் அரசை ஊழல் அரசு என்று விமர்சித்தார். இருவரும் அரசியல் எதிரிகளாக திகழ்கின்றனர். தற்போது மாம்பழம் சீசன் என்பதால் தனது அரசியல் வெறுப்பை மறந்து மமதா மோடிக்கு மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார். அதிரடியான விஷயங்களை செய்வதில் மேற்கு வங்க முதல்வர் மமதா எப்போதும் தனித்துவம் வாய்ந்தவர். தேர்தல் ஆணையம் பிரச்சாரம் செய்ய தடைவிதித்தபோது, தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவே போராட்டம் நடத்தினார் மமதா.

தனது அன்பின் வெளிப்பாட்டை பிரதமரோடு நிறுத்திகொள்ளாமல், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் அமித்ஷா, சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோருக்கும் மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த விவேக்கின் மகள்!

Halley karthi

கொரோனா பாதித்தோர் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு!

Jeba Arul Robinson

மருத்துவ அவசர நிலை அறிவிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்!

Jeba Arul Robinson