தமிழ் நாட்டில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தொகுதி பங்கீடு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகியுள்ளது. இதில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதனை தொடர்ந்து என்.டி.ஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி எண்ணிக்கை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகளுக்கு 56 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது அதிமுக. அதன் படி பாஜக 27 தொகுதிகலிலும், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள கட்களுக்கு தொகுதிகளை ஒதுக்கிய பின்னரே அதிமுக போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை தெரிய வரும்.!







