நந்தன் கால்வாய் திட்டம் – முனைப்பு காட்டியது யாருடைய ஆட்சியில்? பேரவையில் விவாதம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நந்தன் கால்வாய் திட்டத்திற்கு யார் ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று விளையாட்டு மற்றும் பொதுப்பணித்துறையின் மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன. இந்த விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார்,விக்கிரவாண்டி தொகுதிக்கான கோரிக்கைகள் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிப்காட் கொண்டு வர வேண்டும்.திண்டிவனம் பகுதியில் உள்ள சாலைகளை நான்கு வழி சாலையாக மேம்படுத்தி தர வேண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும். 27 கிராமங்களின் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். விக்கிரவாண்டியில் தொழிற்பயிற்சி கல்லூரி அமைக்க வேண்டும்” என்றார்.

இதனைத்தொடர்ந்து நந்தன் கால்வாய் திட்டம் குறித்து பேசிய அவர், 50 ஆண்டு காலமாக நந்தன் கால்வாய் திட்டம் குறித்து பேசாத தலைவர்களே இல்லை. ஆனால் இன்று வரை திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நீர்வளத்துறை அமைச்சர் இடம் கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் கேட்கிறார்கள் அதனை நாளை கேட்டால் சரியாக இருக்கும்.” என்றார்.

இதற்கு பதிலளித்த எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எங்கள் திமுக ஆட்சியில், கடந்த ஆண்டு நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு அறிவித்து அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது என்றார்.

சி.வி சண்முகம்

நந்தன் கால்வாய் திட்டம் கடந்த 80 ஆண்டுகளாக எந்த யாருடைய ஆட்சியிலும் செயல்படுத்த முனைப்பு காட்ட வில்லை. ஆனால் அம்மாவின் ஆட்சியில், நான் அமைச்சராக இருந்த பொழுதுதான் முதல்முறையாக நந்தன் கால்வாயை தூர் வாருவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக தூர்வாரப்பட்டது. இப்பொழுது, நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதாக சொல்லப்பட்டார்கள். இதுவரை அப்படி எந்த திட்டமும் நடைபெறவில்லை என்றார்.

எ.வ வேலு

கந்தன் கால்வாய் திட்டம் நீண்ட நெடிய காலமாக கேட்டுக் கொள்ளப்பட்ட திட்டம். நான்தான் கால்வாய் திட்டம் அதிமுக ஆட்சியில் தூர்வார ஏற்பாடு செய்யப்பட்டது இல்லை என்று சொல்லவில்லை ஆனால் சாத்தனூரின் உபரிநீர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏறத்தாழ 11 ஏரிகளில் நிரப்பி அங்கு விவசாயம் பார்க்கப்பட்டு, அதற்கு பின்னால் விழுப்புரம் மாவட்டத்தை வந்து சேர்வதுதான் அந்த திட்டத்தின் நோக்கம். இது குறித்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வாக்குறுதி கொடுத்தது. இந்த திட்டத்திற்கான நிலை எடுப்பதற்க்கு பணம் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது என்று கூறினார்.

இறுதியாக சபாநாயகர் பேசுகையில், இவ்வளவு ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்தால் நந்தன் கால்வாய் திட்டம் தமிழக வெற்றி கழக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என நம்புப்கிறென்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.