இடைத்தேர்தலில் அதிமுகவினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் குற்றஞ்சாட்டினார்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பரப்புரையில் ஈடுபட்டார்.
களக்காடு, கோவில்பத்து, மூங்கிலடி, கீழப்பத்தை, மேலப்பத்தை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், கடந்த இடைத்தேர்தலின் போது அமைச்சர்கள் உள்ளிட்டோர் தொகுதியில் தங்கியிருந்து பல்வேறு வாக்குறுதிகள் அளித்ததை சுட்டிக்காட்டினார். ஆனால் அந்த வாக்குறுதிகளை அதிமுகவினர் நிறைவேற்றவில்லை என்றும் ரூபி மனோகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.







