ஆயிரம் விளக்கு தொகுதியில் தாம் வெற்றி பெற்றால், தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதாக பாஜக வேட்பாளர் குஷ்பு வாக்குறுதி அளித்தார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு, அந்த தொகுதிக்கு உட்பட்ட கிரியாப்பா சாலை, தாமஸ் சாலை, குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
பின்பு ஆயிரம் விளக்கு தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், தொகுதியில் குடிநீர் பிரச்னை, பாதாள சாக்கடை பிரச்னை, வீட்டுமனை பட்டா இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகவும், சாலைகள் சேதமடைந்து இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த அனைத்து பிரச்னைகளையும் தாம் வெற்றி பெற்ற பிறகு தீர்த்து வைப்பதாகவும் குஷ்பு தெரிவித்தார்.







