பெகாசஸ் விவகாரம்: ”பிரதமர் தேசத்துரோகம் இழைத்துள்ளார்” – ராகுல் காந்தி

எதிர்கட்சி தலைவர்களை உளவுப்பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை, பிரதமர் மோடி வாங்கி, தேசத்துரோகம் இழைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில்…

எதிர்கட்சி தலைவர்களை உளவுப்பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை, பிரதமர் மோடி வாங்கி, தேசத்துரோகம் இழைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிர்கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சுமார் 300 பேரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் புயலை, கிளப்பியது.

கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மேற்கொண்ட 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பெகாஸஸ் உளவு மென்பொருளும், ஏவுகணை அமைப்பும் இடம்பெற்றுள்ளதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியான செய்தி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதே ஆண்டில் இஸ்ரேலுக்கு பயனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/RahulGandhi/status/1487309259431886849

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எதிர்கட்சிகளின் செல்பொன்களை ஊடுருவி உளவுப்பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை பிரதமர் மோடி வாங்கியுள்ளதாகவும், இதன்மூலம் தேசதுரோகம் புரிந்துள்ளதாகவும் சாடியுள்ளார். இதேகருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சுரியும் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய மத்திய அரசு இனியும் ஆட்சியில் நீடிப்பதை ஏற்க முடியாது எனவும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/RahulGandhi/status/1487317567345774599

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா பெகாசஸ் விவகாரத்தில் நாடாளுமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் மத்திய அரசு தவறாக வழிநடத்தியதாகவும் குறைகூறினார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் எனவும் கூறினார்.

https://twitter.com/thirumaofficial/status/1487424936012513282

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பெகசாஸ் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். நீட் விலக்கு மசோதாவைக் கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்தும், பெகாசாஸ் விவகாரத்தை கண்டித்தும், குடியரசுத் தலைவர் உரையை விசிக புறக்கணிப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.