நெல்லையில் பயங்கரம்…திமுக செயலாளர் கொலை

பாளையங்கோட்டை காவல் நிலையம் அருகே நள்ளிரவில் திமுக பிரமுகர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாநகர 38வது வார்டு திமுக செயலாளரான பொன்னுதாஸ் என்கிற அபே…

பாளையங்கோட்டை காவல் நிலையம் அருகே நள்ளிரவில் திமுக பிரமுகர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாநகர 38வது வார்டு திமுக செயலாளரான பொன்னுதாஸ் என்கிற அபே மணி, அப்பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு 11 மணி அளவில் பாளையங்கோட்டையிலுள்ள அவரின் வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்மநபர்கள் மணியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியோடி உள்ளனர்.

சத்தம் கேட்டு வந்த பொன்னு தாஸின் தாயார் பேச்சியம்மாள் நடந்த சம்பவத்தை பார்த்து கூச்சலிட்டுள்ளார். இரவு 11 மணி என்பதால் தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லை. ஆனால் கூச்சல் சத்தம் கேட்டு மக்கள் திரண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

பின், போலீசார் அபேமணியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாஸ்மாக் மதுபான பார் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டு இருக்ககூடும் எனவும், உள்ளாட்சி தேர்தலில் துணை மேயர் பதவிக்கு போட்டியிட முயற்சி செய்து வந்த நிலையில் அபே மணி கொலை செய்யப்பட்டது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பொன்னுதாஸுக்கு முருகம்மாள் என்ற மனைவியும் சுபேசன் மற்றும் சரண்யா என 2 குழந்தைகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.