தமிழ் நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வருகிற மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9 ஆம் தேதி கடைசி நாளாகும்.
தமிழ்நாட்டில் உள்ள மாநிலங்களவை எம்பிக்கள் என். ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, தம்பிதுரை, ஜி.கே. வாசன், பி. செல்வராசு உள்ளிட்டோரின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடையவுள்ளது.







