காந்தியின் நினவுநாளில் மக்களுடன் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

85வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் ரேடியோ வாயிலாக மக்களுடன் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் ரேடியோ மூலமாக மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களிடம்…

85வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் ரேடியோ வாயிலாக மக்களுடன் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் ரேடியோ மூலமாக மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றுவது வழக்கம். இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு முக்கியமான விஷயங்களை அவர் பகிர்ந்துகொள்ளவார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிறுகளிலும் இந்நிகழ்ச்சி மக்களிடையே சென்றடைய ஏதுவாக பாஜகவினர் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் இந்த ஆண்டின் முதல் மாதத்தின் இறுதி ஞாயிறான இன்று 85வது மான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றவுள்ளார். சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியடிகளின் 75வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர போராட்டத்தில் அவரின் பங்களிப்பு குறித்து பல முக்கிய தகவல்களை பிரதமர் மோடி மக்களிடையே பகிர்ந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இதுகுறித்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் தெரிவித்த தகவலில், காந்தியின் 75வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட பிறகு காலை 11.30 மணிக்கு மான் கி பாத் நிகழ்ச்சியில் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்பதாலும், காந்தியடிகளின் நினைவு தினமாக இருப்பதாலும் பல்வேறு தரப்பினரிடமும் இன்றைய நிகழ்ச்சி கவனம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.