தாமிரபணி கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருப்பதாக அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஐஎன்டியூசி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருக்கு, அந்தப் பகுதியினர் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பளித்தனர்.
அப்போது பேசிய ராஜேந்திர பாலாஜி, சாலைகள் சீரமைப்பு, பாதாள சாக்கடைத் திட்டம், தாமிரபணி கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் அதற்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். மக்கள் நலன் கருதி அனைத்து பணிகளையும் விரைந்து முடிப்போம் என்ற அவர், தன்னை ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.







