பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

மலையாள சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன் உடலநலக்குறைவால் இன்று காலமானார்.

மலையாளத்தில் பிரபல இயக்குனரும், நடிகருமான சீனிவாசன்(69) காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தேசிய மற்றும் கேரள அரசின் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியதுடன் காமெடி வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் புள்ளக்குட்டிக்காரன், லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.