உயர்ந்த பதவியில் இருந்தாலும் மனமுவந்து பாராட்டும் பண்பாளர் முதலமைச்சர்:சைதை துரைசாமி!

உயர்ந்த பதவியில் இருந்தாலும் மனமுவந்து பாராட்டும் பண்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சைதை துரைசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி,…

உயர்ந்த பதவியில் இருந்தாலும் மனமுவந்து பாராட்டும் பண்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சைதை துரைசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி, கிண்டி, கன்னிகாபுரம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின்போது, அப்பகுதியில் ஒரு ஆண் குழந்தைக்கு வெற்றிச் செல்வன் என பெயரிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தன்னை விட சிறப்பாக செயல்படுபவர் சைதை துரைசாமி என்று பாராட்டிய முதலமைச்சருக்கு இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். தனக்கும் முதலமைச்சருக்கும் நீண்ட நெடிய நட்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.