இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இதில், 140க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்த நிலையில், உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலர் குணமடைந்து மீண்டும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் போராட்டத்தைக் கைவிடுமாறு அவர்களிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகி ராபர்ட், முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார்.