2 டிஜிபி உட்பட 20 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

2 டிஜிபிக்கள் உட்பட 20 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தீயணைப்புத்துறையின் புதிய டிஜிபியாக ஆபாஷ் குமாரும், ஊர்க்காவல் படை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

2 டிஜிபிக்கள் உட்பட 20 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தீயணைப்புத்துறையின் புதிய டிஜிபியாக ஆபாஷ் குமாரும், ஊர்க்காவல் படை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஏடிஜிபி வெங்கட்ராமன், கூடுதல் பொறுப்பாக காவல்துறை நிர்வாகப் பிரிவை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக ஆசியம்மாள், காவல்துறை பொதுப்பிரிவு ஐஜியாக செந்தில்குமார், சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜியாக பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று, கடலோர பாதுகாப்பு குழுமம் டிஐஜியாக கயல்விழி நியமிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட எஸ்பியாக பிரபாகர், தென்காசி மாவட்ட எஸ்பியாக செந்தில்குமார், நாமக்கல் மாவட்ட எஸ்பியாக கலைச்செல்வன், தருமபுரி மாவட்ட எஸ்பியாக ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்ட எஸ்பியாக முத்தரசி, ஆவடி போக்குவரத்து துணை ஆணையராக ஜெயலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு ஏஐஜியாக உமா, சிபிசிஐடி எஸ்பியாக ரவாளி பிரியா மற்றும் உளவுத்துறை சிறப்புப்பிரிவு எஸ்பியாக அருளரசு ஆகியோரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.