மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், 3 ஆயிரத்து 42 சவரன் தங்க நகையை நூதன முறையில் மோசடி செய்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கும்பகோணத்தை சேர்ந்தவர் பாத்திமா நாச்சியா. இவர், கடந்த 2011ம் ஆண்டில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்களிடம் நூதன முறையில் நகைகளை வாங்கி ஏமாற்றியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு சவரனுக்கு 30 நாட்களில் ஆயிரத்து 500 ரூபாய் தருவதாகவும், 15 நாள் முடிந்த பிறகு நகைகளை திருப்பித் தருவதாகவும் கூறி பலரிடமும் தங்க நகைகளை பெற்றுள்ளார். மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர்களுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இதனால் பலரும் நம்பி, பாத்திமாவிடம் நகையை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், 2012ம் ஆண்டில் 3 ஆயிரத்து 42 சவரன் நகைகளுடன் அவர் தலைமறைவாகியுள்ளார். இதுதொடர்பான விசாரணைக்காக சீர்காழி காவல் நிலையத்துக்கு பாத்திமா நாச்சியா வந்தார். இதையறிந்து அங்கு ஏராளமான பெண்கள் திரண்டதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்த நகை மோசடி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.