மருத்துவத்துறை தான் நான் சுற்றி சுழன்று வருவதற்கும் காரணமாக இருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில், ஹோல்ட் மெடிக்கல் அகாடமி ஆப்
இந்தியா அமைப்பு சார்பில் மருத்துவர்களுக்கு தேசிய அளவிலான இரண்டு நாள்
கருத்தரங்கு கார்டியோ பேஸ் 2023 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, இருதய நோய் நிபுணர் பேராசியர் மருத்துவர் பேராசிரியர் தணிகாச்சலத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார்
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது..
”வாழ்நாள் சாதனையாளர் விருதினை பேராசிரியர் தணிகாசலம் அவர்களுக்கு வழங்க வர முடியுமா என்று சந்தேகத்தோடு கேட்டார்கள். சந்தேகத்தோடு கேட்க வேண்டாம்.
உறுதியாக வருவேன் கூறினேன்.
ஏன் என்றால், தணிகாசலம் என்னிடம் மருத்துவ சார்ந்து கூறினாலும், நாட்டு நடப்பு சார்ந்து கூறினாலும் நான் அதனை ஏற்பேன். மருத்துவர் தணிகாச்சலத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை நான் கொடுப்பது என் உள்ளத்தில் மறக்கமுடியாத நினைவலையாக அமையும்.
அவர் எனக்கு மருத்துவம் மற்றும் நாட்டு நடப்பு குறித்து அறிவுரை வழங்குவார். மருத்துவர் தணிகாசலத்துக்கும், கருணாநிதிக்கும் இருந்த நட்பு பெரியது. மருத்துவம் சார்ந்த எதுவாக இருந்தாலும் முதலில் கருணாநிதி கேட்பது, தணிகாச்சலத்திடம் கேட்டாச்சா என்று தான். அந்த அளவுக்கு மருத்துவத்தில் இவருக்கு கருணாநிதி முக்கியத்துவம் கொடுப்பார்.
இதனையும் படியுங்கள் : ஈரோடு இடைத்தேர்தல் – தலைமை தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி புகார்
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி
அளிக்கிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எவ்வளவோ நிகழ்ச்சிகளுக்கு
சென்றுள்ளேன். அப்படி செல்லும் போது எனக்குள் ஒரு துடி துடிப்பு இருக்கும்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அது சரியானது போல இருக்கிறது.
மருத்துவர் தணிகாசலம் தான் எனக்கு காட் ஃபாதர். அவரின் அறிவுரையும்,
மருத்துவத்துறை தான் நான் சுற்றி சுழன்று வருவதற்கும் காரணமாக இருக்கிறது.
தணிகாச்சலத்தை திமுக தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் எப்படி வாழ்த்தி
இருப்பாரே அப்படி நான் வாழ்த்துகிறேன்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
– யாழன்







