ஈரோடு இடைத்தேர்தல் – தலைமை தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி புகார்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணம் கொடுப்பதாக ஆசை காட்டி, நாள் முழுவதும் வாக்காளர்கள் அடைத்து வைக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.…

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணம் கொடுப்பதாக ஆசை காட்டி, நாள் முழுவதும் வாக்காளர்கள் அடைத்து வைக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள், தலைவர்கள் என தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பிரச்சாரத்தை தொடங்கி விட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் கமல் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறைகேடுகள் நடப்பதாக கூறி தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் நாம் தமிழர் கட்சி சார்பாக புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரை அக்கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் சங்கர் அளித்துள்ளார்.

அண்மைச் செய்தி:  கொரோனா ஊரடங்கு: அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலம் சிறப்பு விடுப்பாக அறிவிப்பு – தமிழ்நாடு அரசு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் சங்கர் பேசுகையில், “ஆளுங்கட்சியின் அனைத்து சட்ட விரோத செயல்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பணம் கொடுப்பதாக ஆசை காட்டி நாள் முழுவதும் வாக்காளர்களை அடைத்து வைக்கின்றனர். வருங்காலங்களில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு 5,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஈரோட்டில் புதியதாக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். எங்கள் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.