குற்றம் தமிழகம்

வேறொருப் பெண்ணுடன் திருமணம்: காதலனைத் தடுத்து நிறுத்தியக் காதலி

வேறொருப் பெண்ணுடன் திருமணத்திற்கு தயாரான காதலனைத் காவல் நிலையத்தில் புகார் அளித்து தடுத்து நிறுத்தியுள்ளார்.

சென்னை அடுத்த வடபழனியில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 13 ஆண்டுகள் காதலித்து 68 லட்சம் வரை ஏமாற்றி  வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இருந்த  காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பெண் தரப்பில்  புகார் அளித்த  நிலையில் நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வடபழனியைச் சேர்ந்தவர் செல்வி சூர்யா ராஜ்குமார்(வயது 27).  இவர் பள்ளியில் 10
ஆம் வகுப்பு படிக்கும் போதே உடன் படித்த நிஷாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலித்த போது நிஷாந்த்  மற்றும் செல்வி சூர்யா இடையே  திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது .

திருமணம் செய்து கொள்ள பல முறை முறையிட்டும்  சூர்யாவிடம் நிஷாந்த் பல்வேறு காரணங்களைக் கூறி தவிர்த்து வந்துள்ளார், இதனிடையே தனது  தந்தைக்குத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்  அவருக்கு உதவி செய்தால் தான்  திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார் என கூறியுள்ளார். இதற்கு நிஷாந்தின் தந்தை சுதர்ஷன், தாய் ஜெயந்தி ஆகியோரும் உடந்தையாகச்  செயல்பட்டு தனது மகனை திருமணம் செய்து வைப்பதாகக் கூறி சுமார் 68 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் நிஷாந்திற்கு தொழிலதிபர் மகளுடன் திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.  செல்வி சூர்யா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனது நண்பர்கள் மூலம் விசாரித்ததில் நிஷாந்த் இதேபோல் வெளி நாடுகளில் முதலீடு செய்வதாகக் கோடிக்கணக்கில் மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

எனவே நிஷாந்த் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் அளித்ததன் பெயரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் நிஷாந்த் மற்றும் அவாின் பெற்றோரை விசாரணைக்காக அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் நடக்கவிருந்தத் திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்தி வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘பழைய பென்ஷன் தொகையை மீண்டும் அறிவிக்க வேண்டும்’

Arivazhagan Chinnasamy

சென்னை வந்தது 1.66 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள்!

Halley Karthik

சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் ரயில் சேவை: கொடியசைத்து துவங்கி வைத்த பிரதமர் மோடி

EZHILARASAN D