தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நம் பாரத தேசத்தின் முதுகெலும்பாக இருக்கும் உழவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள் இன்று. மண்ணின் வாசனையோடு தங்கள் வாழ்க்கையையும் கலந்தவர்கள் உழவர்கள். விதைத்தக்கும் ஒவ்வொரு விதையிலும் நம் எதிர்காலத்தையும் சேர்த்து விதைக்கும் அவர்களின் உழைப்பு தான் இந்த தேசத்தின் உண்மையான செல்வம்.
பசுமை நிறைந்த வயல்களில் பிறக்கும் நம்பிக்கை, உழவர்களின் வியர்வைத் துளிகளால் வளர்கிறது. அவர்களின் கரங்களில் தான் உணவு பாதுகாப்பும் நாட்டின் வளமும் இருக்கிறது. அனைத்து உழவர்களுக்கும் எனது தேசிய உழவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் உழைப்புக்கு நம் தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







