செய்திகள்

நானே செங்கல்லை மறந்தாலும் எதிர்கட்சியினர் மறக்க விடுவதில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நானே செங்கல்லை மறந்தாலும் எதிர்கட்சியினர் மறக்க விடுவதில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இல்லத் திருமண விழாவான நவஜீவன் – வித்யா மணமக்களின் திருமணத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார். அதன் பின்னர் பேசிய அவர் தெரிவித்ததாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

” திமுகவினர் தன்னை இரண்டாம் பேராசிரியர், கலைஞர், பெரியார் என பட்டம்
கொடுப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை. சின்னவர் என கூப்பிடுகின்றனர். உண்மையில் தான் சின்னவர் தான். ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்தினாலும் , தன்னுடைய தொகுதிக்கு போக வேண்டும். என் மீது நம்பிக்கை வைத்து பெரிய வாக்கு வித்தியாசத்தில் என்னை அவர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர்.

சென்னையில் இருந்தால் தொகுதியில் தான் இருப்பேன். காலை சிற்றுண்டி திட்டத்தில் தமிழக முழுவதும் 1.50 இலட்சம் குழந்தைகள் பயன்பெற்றனர். தற்போது அந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்து 2 லட்ச மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அண்மைச் செய்தி : ரயில்வே அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த எல். முருகன்

ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஆய்வு சென்றாலும் அருகே உள்ள பள்ளிக்கு சென்று காலை
சிற்றுண்டியை குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டு வருகிறேன். திமுக கழகத்திற்காக எம்எல்ஏ பொன்னுசாமி மறைந்த முதல்வர் கலைஞர், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரு உடன் பணியாற்றி வருகிறார். எம்எல்ஏ பொன்னுசாமி பார்த்து நான் பெருமையாக கருதுகிறேன், அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

செங்கல் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். நானே செங்கல் குறித்து மறந்தாலும், நீங்கள் யாரும் மறக்கமாட்டீர்கள் போல. எதிர்க்கட்சியினரும் மறக்க மாட்டார்கள் போல. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த போது வெற்றி வாய்ப்பு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டேன்.

திமுக தலைவர் ஸ்டாலினிடம் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்
என சொன்னேன். திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு நாள் பிரச்சாரத்திற்கு சென்றார். பின்னர் தேர்தல் வெற்றி குறித்து அவரிடம் கேட்டபோது அவர் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

அதேபோல் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பொதுமக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். தலைவர் ஸ்டாலின் மக்களின் நாடித் துடிப்பை தெரிந்தவர். மக்களுக்காக என்ன திட்டம் தேவையோ அதனை ஒவ்வொன்றாக பார்த்து செய்து வருகிறார். தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து அதிமுகவினர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினர்.தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள் என தேர்தல் பிரச்சாரத்தில் எதிர் கட்சி தலைவர் பழனிசாமி பேசினர்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் தாலிக்கு தங்கம் 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கப்பட்டது. அதில் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும், விவாகரத்து ஆகியும் தாலிக்கு தங்கம் திட்டம் வாங்கினார். இதனால் தான் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை மாற்றி புதுமைப்பெண் திட்டம் என்ற திட்டத்தை அறிவித்தார்.

முதலமைச்சர்  வரும் 6 மாதத்திற்குள் மகளிருக்கான உரிமையான  ரூ.1000 தொகையை
விரைவில் நடைமுறை படுத்த உள்ளார். சுயமரியாதை திருமணத்தை அண்ணா அங்கீகரித்தார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். மணமக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், விட்டுக் கொடுத்து வாழ வேண்டும், என்ன தேவையோ ஒருவருக்கொருவர் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதிமுக மாதிரி இருக்க வேண்டாம், அதிமுக – பாஜக எப்படி இருக்கிறார்கள் என்பது அனைவருக்குமே  தெரியும்.

யாழன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

துருக்கி நிலநடுக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Web Editor

கொரோனா விழிப்புணர்வு: மூக்கு வழியாக 100 பலூன்களை ஊதி சாதனை!

Dhamotharan

ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

Web Editor