2-வது ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 132 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 2-0 என ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி…

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 132 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 2-0 என ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனிடையே 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் மற்றும் பில் சால்ட் இறங்கினர். பில் சால்ட் 7 ரன்களில் ஆட்டமிழக்க ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்து வந்த டேவிட் மெலன், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோரும் ஆட்டமிழக்க ஜோஸ் பட்லர் களத்தில் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜேசன் ராய் சதமடித்தார். 124 பந்துகளில் 132 ரன்கள் எடுத்து சாஹிப் அல் ஹசன் பந்தில் அவுட் ஆனார். ஜோஸ் பட்லர் 76 ரன்கள் எடுத்தார். மொயின் அலில் 42 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை எடுத்தது.

அண்மைச் செய்தி : ”இது தோல்வி அல்ல; வெற்றி வாய்ப்பை தவற விட்டுள்ளோம்” – செல்லூர் ராஜூ

327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி ரன்கள் எடுக்க தடுமாறியது. தொடக்க வீரர்கள் ரன்  ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இக்பால் மட்டும் 35 ரன்கள் எடுத்தார். பிறகு வந்த சாஹிப் அல் ஹசன் மற்றும் மஹ்மதுல்லா இருவரும் சிறப்பாக விளையாடினர். சாஹிப் அல் ஹசன் அரைசதம் அடித்தார். இருப்பினும் 44.4 ஓவர்களிலேயே வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.