மதுரவாயல் ஸ்ரீபுவனேஸ்வரி நாகாத்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழா- பெண்கள் முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு!

சென்னையை அடுத்த மதுரவாயலில் பிரசித்தி பெற்ற நாகாத்தம்மன் கோயிலின் 25ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள பிரசித்தி…

சென்னையை அடுத்த மதுரவாயலில் பிரசித்தி பெற்ற நாகாத்தம்மன் கோயிலின் 25ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.

சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீ புவனேஸ்வரி நாகாத்தம்மன் ஆலயத்தின் 25ஆம் ஆண்டு ஆடித்திருவிழா வெள்ளி விழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு இந்த பகுதியை சேர்ந்த பெண் பக்த்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று மேளதாளம் முழங்க அம்மனை வழிபாடு செய்தனர்.

இதில் மதுரவாயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் இருதினங்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு சமபந்தி போஜனம் வழங்கப்பட்டு வரும் ஞாயிறு அன்று கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.