ஆகாஷ் மரண வழக்கு : போலீசார் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்…..!

மானமதுரையை சேர்ந்த இளைஞர் ஆகாஷ் மரண வழக்கில் 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் ஆகாஷ் டெல்சன். இவர் சாலையில் இரண்டு பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக கடந்த 6ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது தப்பிக்க முயன்ற ஆகாஷிற்கு கால்முறிவு ஏற்பட்டதால் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் தாக்கியதே ஆகாஷின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி ஆகாஷின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக வழக்கும்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் ஆகாஷ் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதுடன்,  வழக்கில் எஸ்சி, எஸ்டி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆகாஷ் மரண வழக்கில் தொடர்புடைய 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஆய்வாளர், ஒரு எஸ்.ஐ, 4 ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.