கள்ளக்குறிச்சியில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 5 ஆயிரத்திற்கும் மேலான விநாயகர் சிலைகளை வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள ஆரிய வைசிய சமூகத்தை சோ்ந்தவா்கள் மற்றும் ஆரிய வைசிய மகிளா சங்கத்தின் சார்பாக பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆடி மாத பிறப்பை முன்னிட்டும், ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டும் முதல் கடவுளான விநாயகரை வழிபடும் வகையில் 5 ஆயிரத்து எட்டு விநாயகரை மஞ்சளால் பிடித்து அதனை விநாயகர் போல் அலங்கரித்து பஞ்ச சகஸ்ர கணபதி பூஜையை விமரிசையாக நடத்தினர்.
இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விநாயகருக்கு உகந்தையான
மந்திரங்களை பூஜித்தும் மற்றும் அபிஷேக ஆராதனைகள் செய்தும் வழிபட்டனர். மேலும் இந்த நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டதோடு இந்த பஞ்சர சகஸ்ர கணபதி பூஜையினால் திருமண தடைகள் நீங்கும் மற்றும் பிள்ளையாரை வீட்டிற்கு கொண்டு சென்றால் நினைத்த காரியம் நிறைவேறும் என ஐதீகமாக எண்ணி ஆண்டுதோறும் இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர். பிறகு பக்தர்களுக்கு பிரசாதங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி பிள்ளையாருடன் வழி அனுப்பி வைத்தனர்.
ரூபி.காமராஜ்







