தனுஷ் நடிக்கும் ’கர’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது..? – படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்…….!

தனுஷ் நடித்துள்ள ’கர’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புது திரைப்படம் ’கர’. இப்படத்தை ‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.

ஐசரி கே.கணேஷ், தயாரிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ’கர’ படத்தின் முதல் பாடலானது நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.