“உயர்கல்வி பயில ரூ.10 லட்சம் வரை கடன்” –  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.  இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம்…

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.  ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது.

கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதன்முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை  தாக்கல் செய்தார்.  அப்போது, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,  “நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயில ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும். மத்திய அரசின் எந்த சலுகைகளும் பெறாத மாணவர்களுக்குக் கல்விக் கடனாக ரூ.10 லட்சம் தரப்படும்.  பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். புதிதாக பணிகளில் சேரும் இளைஞர்களுக்கு அரசு தரப்பில் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.