முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோட்டைப்போல கர்நாடகாவிலும் அண்ணாமலை தோல்வியை பெற்றுத் தருவார்-மாணிக்கம் தாகூர் எம்.பி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் அதிமுகவிற்கு தோல்வியை பெற்று தந்தது போல் கர்நாடகாவிலும் பாஜகவிற்கு தோல்வியையும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியையும் பெற்று தருவார் என மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் தனியார் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் மற்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் பின்னர் கல்லூரி மாணவர்கள் அடங்கிய இளையோர் பாராளுமன்றம் கூடியது. இந்த இளையோர் பாராளுமன்றத்தின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் செயல்பட்டார். இந்த இளையோர் பாராளுமன்றத்தில் இன்று சமூக வலைதளம் குறித்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அண்மைச் செய்தி :”பெண்களை பின் தள்ளக் கூடிய எந்த ஒரு நாடும் வளர்ந்தது இல்லை” – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த மசோதா குறித்து இளையோர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு
தங்கள் கருத்துக்களை விவாதத்தில் எடுத்து வைத்தனர். மேலும் இளையோர்
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் இளையோர் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இன்று நடைபெற்ற இளையோர் பாராளுமன்றம் என்பது இந்தியாவின் உண்மையான
பாராளுமன்றம் போல் செயல்பட்டது மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்ததாவது..

“ ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது தமிழக அரசின் வெற்றி,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் வெற்றி. இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்வி என்பது அதிமுக மக்களுடைய நம்பிக்கையை என்றும் பெற முடியாது என்பதற்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இதனையும் படியுங்கள்: ”அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை இந்திய ஒன்றியம் எதிர்கொண்டுள்ளது” – மு.க.ஸ்டாலின்

இந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்துவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து விட்டு தற்போது தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையம் மீது குறை சொல்வது என்பது மத்திய அமைச்சர் அமித்ஷா வை குறை சொல்வதற்கு சமம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் உள்ளது என்பதை இந்த தேர்தல் காட்டி இருக்கிறது. அண்ணாமலை ஈரோட்டில் அதிமுகவிற்கு தோல்வியை பெற்று தந்தது போல் கர்நாடகாவிலும் பாஜகவிற்கு தோல்வியையும் காங்கிரஸ் கட்சிக்கு
வெற்றியையும் பெற்று தருவார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேசிய அரசியல் குறித்து பேசுவதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது.

பாஜகவின் ஆளுநர்கள் தங்களுடைய ஆளுநர் பதவியை பயன்படுத்தி கவர்னர் மாளிகையை பாஜகவின் கட்சி அலுவலகத்தை போல் செயல்படுத்துவது என்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. அப்படிப்பட்ட செயலை எந்த ஆளுநரும் செய்யக்கூடாது. ஆளுநருக்கு உள்ள தகுதியையும் ஆளுநரின் கவுரவத்தையும் விட்டுக் கொடுக்கின்ற வகையிலே அதனை சீர்குலைக்கும் வகையிலே எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

தெலுங்கானாவை பொருத்தமட்டில் டிஆர்எஸ் கட்சி தொடர்ந்து ஆளுநர் தமிழிசை அவர்களை  எதிர்த்து 6 மாதம் காலம் போராடி வருகிறார்கள். இது சரியான நகர்வாக இருக்காது. கவர்னர் பதவி என்பது மிகவும் மதிக்கப்பட வேண்டிய பொறுப்பாக இருக்கிறது  அதில் அமர்பவர்களும் மதிக்கப்படுபவர்களை போல் நடந்து கொள்ள வேண்டும்” என மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மன்னார் வளைகுடாவில் “கடற்கொள்ளையன்”

Web Editor

குடியரசு தலைவர் தேர்தல்- பாஜகவிடம் காங்கிரஸ் கூறியது என்ன?

Web Editor

லவ் டுடே இதைத்தான் உணர்த்த விரும்புகிறதா?- ஒரு மாறுபட்ட விமர்சனம்

EZHILARASAN D