மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நவோதையா, வித்யாலையா உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவதற்காக மத்திய அரசால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டன.
இதையும் படியுங்கள் : சிம்புவின் ”பத்து தல” படத்தின் டீசர் வெளியானது!
இதன் முதல் தாள் தேர்வை மொத்தம் 14,22,959 பேர் எழுதியதினர். இதில் 5,79,844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் இரண்டாம் தாள் தேர்வை மொத்தம் 12,76,071 பேர் எழுதினர், அதில் 3,76,025 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கான முடிவுகள் சிபிஎஸி-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் http://ctet.net.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று தங்களது முடிவுகளை காணலாம் என்று சிபிஎஸி அறிவித்துள்ளது.







