என் உயிர்காத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எங்கள் உயிர் உள்ளவரை உங்களை நினைவு கொள்வோம் என ஓய்வு பெற்ற செய்தியாளர் சையது அப்துல் கனி தனக்கு நேர்ந்த விபத்தின் போது நடந்ததை கண்ணீர் மல்க நினைவுகூர்ந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
“நான் அண்மையில் பத்திரிக்கை துறையில் இருந்து ஓய்வு பெற்றேன். என் மகனின், திருமண வேளையின் போது கடந்த ஜன. 23-ம் தேதி எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில், என்னுடைய வலது கால் எலும்பு முறிந்தது. என்னுடைய குடும்பத்தார், மகனின் திருமணத்திற்கு சேர்த்த பணத்தில், எனக்கு அன்று இரவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் 15 நாட்களில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்து, தற்போது நன்றாக இருக்கிறேன்.
ஒரு பத்திரிக்கையாளராக இல்லாமல், அரசு நிதி கிடைக்காத நிலையில், இதற்கெல்லாம் யார் காரணம் என்றால், இந்த தருணத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவை நாடினேன். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தினால் தான் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஹஸீப் என்னை உடனடியாக தொடர்பு கொண்டார்.
https://twitter.com/syedabdulkani1/status/1757581610625708517?t=MRVDeAgk82Pb-bAI_7aMig&s=08
பின்னர் உடனடியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு, எனது நிலைமையை கேட்டறிந்தார். பின்னர் எனக்கு மருத்துவமனையில் தேவையான உதவிகள் அனைத்தையும் தான் பார்த்துக்கொள்வதாக கூறினார். பின்னர் எனது மகனை அழைத்து சிகிச்சைக்கு தேவையான பணத்தை வழங்கினார். அதனால் தான் என்னுடைய வலது காலை நான் மீண்டும் பெற்றுள்ளேன்.
இவ்வாறு அந்த வீடியோவில் அப்துல் கனி கூறியுள்ளார்.







