முக்கியச் செய்திகள் தமிழகம்

கன்னியாகுமரியில் தொடர் கனமழை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகளில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வீடுகளும், விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை,பெருஞ்சாணி, சிற்றார் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.

பேச்சிப்பாறை அணைலிருந்து முதல் கட்டமாக வினாடிக்கு 11,700 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது 8,700 கன அடியாக குறைத்து திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பேச்சிப்பாறை அருகே மணியங்குழி பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

அதே போல் குலசேகரம், பேச்சிப்பாறை சாலை உட்பட மாவட்டத்தின் பல்வேறு சாலைகள் தண்ணீரால் துண்டிக்கப்பட்டது. மேலும், தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Advertisement:

Related posts

மலேசியாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 200 பேர் காயம்!

Karthick

நிலவுக்கு ஃப்ரீ டிக்கெட் : ஜப்பான் தொழிலதிபர் அறிவிப்பு

Jeba

தாய் நாட்டிற்கு பெருமைச் சேர்த்த மற்றொரு இந்தியப் பெண் வம்சாவளி!

Gayathri Venkatesan