நாட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியாமல் இருக்குறார் விஜய் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்……!

கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டடும் விஜய்க்கு நாட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

”தமிழ் நாடு அரசானது சொத்துவரி உள்பட எல்லா வரிகளையும் உயர்த்தி மக்களை பாடுபடுத்திவிட்டு மத்திய அரசு நிதி தர மறுப்பதாக கூறி வருகிறது. மத்திய அரசு கொடுத்த நிதி விசயத்தை எப்போதுதான் தமிழக அரசு ஒத்துக்கொள்ளும்….? .

பட்ஜெட்டை படித்து ஆரய்ந்து பார்க்காமல் பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை ஒன்றுமே இல்லை என்று சொல்லிகொண்டு இருந்தால் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒன்றுமே இல்லாமல் தான் போவார்கள்.

ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் விஜய்,  நாட்டில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் 3-ம் ஆண்டை கொண்டாடி நடனம் ஆடிகொண்டு இருக்கின்றார்.

சட்டம் ஒழுங்கு முதலமைச்சர் கையில் இருக்கின்றது ஆனால் கிராமம் தோறும் கஞ்சா விற்பனை ,கற்பழிப்பு,லாக்கப் டெத் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது. திமுக கட்சியை சார்ந்த 26-பேர் மீது பாலியல் புகார் உள்ளது” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.