விருதுநகர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன்ஒருபகுதியாக இன்று விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர் செங்குன்றாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து அவர் அப்பகுதியில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கு சென்று அங்கு, கடைபிடிக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். கொரோனாவை கட்டுப்படுத்த கிராம மக்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.