முக்கியச் செய்திகள் தமிழகம்

பாதிப்புகளை ஏற்படுத்தி சென்ற யாஸ்!

அதி தீவிர புயலாக உருமாறி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய யாஸ் புயல் கரையை கடந்தது.

ஒடிசாவின் பாலசோர் நகருக்கு 20 கிலோ மீட்டர் தெற்கே, காலை 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள்ளாக யாஸ் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பிறகு வட மேற்கு திசையில் அது நகர்ந்து கொண்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

யாஸ் புயல் ஒடிசாவின் கடற்கரை பகுதிகளை கடுமையாக தாக்கியதால், கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி கடும் சேதமடைந்தன. யாஸ் புயல் கரையை கடந்தபோது, பலத்த சூறாவளிக் காற்று வீசியதோடு, அதி தீவிர கன மழையும் பெய்தது. இதனால், DIGHA, PARADEEP உள்பட ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது.

ஒடிசாவில் மட்டுமின்றி, மேற்கு வங்கத்திலும் கடும் பாதிப்புகளை யாஸ் புயல் ஏற்படுத்தியுள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் உள்பட பல்வேறு மாவட்டங்களில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இந்த புயல் காரணமாக ஜார்க்கண்ட், பிகார், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மகாராஷ்டிரா மாநில ஆளுநருக்கு ரத்து செய்யப்பட்ட அரசு விமான சேவை!

Niruban Chakkaaravarthi

கொரோனாவில் இருந்து மீண்டார் 117 வயது மூதாட்டி!

Jayapriya

தமிழ்நாட்டில் வரும் 28-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு: முதலைமைச்சர்