முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள் சினிமா

திரையரங்குகளை திணறடிக்கும் ஜவான் : ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா..? – விரிவான அலசல்


சுஷ்மா சுரேஷ்

கட்டுரையாளர்

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதைக் குறித்து விரிவாக பார்க்கலாம்

அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான்,  நயன்தாரா , விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.  இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கத்தில் நான்கு வருடங்களுக்கு பின் வெளியாகும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பை ஜவான் பூர்த்தி செய்ததா என்பதை குறித்து விரிவாக காணலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

படத்தின் கதை

விக்ரம் ரத்தோர் மற்றும் ஆசாத் என இரண்டு வேடங்களில் நடித்துள்ள  நடிகர் ஷாருக்கான் ஜவான் படம் முழுக்க தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய டபுள் டமாக்கா ட்ரீட்டை கொடுத்திருக்கிறார். விக்ரம் ரத்தோரின் மகனான ஆசாத் ஜெயிலராக உள்ளார். அவர் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்க தனக்கான ஒரு தனிப்படையை அமைத்துக்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கிறார்.

ஆசாத்தின் நடவடிக்கைகளை தடுப்பதற்காக  போலீஸ் அதிகாரி நர்மதாவாக வலம் வருகிறார் நயன்தாரா. இந்த அராஜகங்களை நயன்தாரா தடுக்கிறாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை.

இசை 

ஜவான் படத்திற்கு இசை அமைத்துள்ள அனிருத் ஜெயிலர், லியோ, ஜாவான் என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுக்கு இசையமைத்து வருவதால் இப்படத்தின் மூலம் கவனம் பெற்றுள்ளார். சில நேரங்களில்  ஜவான்  படத்தின் கதை சுவாரஸ்யம் குறையும் இடங்களில் எல்லாம் அனிருத்தின்  இசை காப்பாற்றி விடுகிறது. இதனால்தான் அனிருத் மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

ஜவான் படத்தில் இவரின்  பின்னணி இசை ரொம்ப பவர்ஃபுல்லாக உள்ளது. வந்த இடம் ஏன் காடு, ராமையா ஒஸ்தாவய்யா பாடல்கள் ஜவான் படத்திற்கு விருந்தாக அமைந்திருக்கிறது. இந்த இரண்டு பாடல்களுக்குமே ஷாருக் கானின் டான்ஸ் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜவான் படத்தில்  நடிப்பை பொறுத்தவரை   ஷாருக்கான் கிட்டத்தட்ட  ஏழு கெட்டப்பில் வருகிறார். ஏழுகெட்டப்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். போலீசாக நடித்திருக்கும் நயன்தாரா ஆக்சன் ரொமான்ஸ் டான்ஸ் என மிரட்டி உள்ளார். தமிழ்நாட்டில் முத்தழகு என பிரபலமான பிரியாமணி மும்பை அழகாக மாறி ஜவான் படத்தில் நல்ல ஸ்கோர் செய்துள்ளார். வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி கதைக்கு ஏற்றவாறு சிறப்பாக பொறுந்துகிறார். மற்றபடி அனைவருமே படத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

அட்லி படம் என்றால் ஏதாவது ஒரு படத்தின் தாக்கம் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் படத்தில் உள்ள சென்டிமென்ட் டச் மற்றும் மேக்கிங் ப்ராசஸ் அதனை மறக்க அடிக்க செய்யும் அளவிற்கு படத்தின் கதை அமைந்துள்ளது.  மொத்தத்தில் ஜவான் வீரர்களின் படை.

– சுஷ்மா சுரேஷ் , நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

11 நாளில் ‘தி கேரளா ஸ்டோரி’ செய்த சாதனை!! லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் எவ்வளவு தெரியுமா?

Web Editor

கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் – செய்தி சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு மிரட்டல்!!

Jeni

பஞ்சாப் முன்னாள் அமைச்சரை கைது செய்தது ஊழல் தடுப்புத் துறை

Web Editor