ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த ஆவடி மத்திய அரசு ஓ.சி.எப் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மோசஸ் மற்றும் தேவன் ஆகிய இருவரும் உள்ளே இறங்கினர். அப்போது இருவரையும் விஷவாயு தாக்கியதில் மோசஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்த சென்ற தீயணைப்பு துறையினர் தேவனை மீட்டு ஆவடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த இருவரும் மத்திய அரசின் ஆர்ட்னன்ஸ் ஆடை தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்து உயிரிழந்த நிலையில் சம்பவம் குறித்து ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.







