கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாட்டைச் சேர்ந்த கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு  800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக  நடைபெற்றது. தமிழகத்திலேயே அதிகப்படியான…

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாட்டைச் சேர்ந்த கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு  800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக  நடைபெற்றது.
தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இங்கு அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாட்டைச் சேர்ந்த கல்லாலங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஆலங்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் வாசிக்க, வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதை ஏற்றுக் கொண்ட பின் போட்டியை விலங்குகள் நல வாரிய மாநில உறுப்பினர் மிட்டல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 800 காளைகளும் 300 காளையர்களும் பங்கேற்றனர்.
வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டு துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை காளையர்கள் மல்லு கட்டி தழுவினர். 5 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், சிறந்த முறையில் காளைகளைத் தழுவிய காளையர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களைத் திணறடித்து களமாடிய காளைகளுக்கும் சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயம், தங்க நாணயம் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டன.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.