கள்ளக்குறிச்சியில், மஞ்சப்பையின் பயன்பாடு மற்றும் பிளாஸ்டிக்
பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,
மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மஞ்சப்பை பயன்படுத்துவது மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இதனை, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மோகன்ராஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாவட்ட
அளவிலான மாரத்தான் ஓட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
தொடங்கி, ஏர்வாய்ப்பட்டினம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வரை ஒன்பது
கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.
இதில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பலரும் ஆர்வமுடன்
கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி
வெற்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்ற நபர்களுக்கு, முதல் பரிசாக நான்காயிரம்
ரூபாயும், இரண்டாவது பரிசாக மூன்றாயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 2000
ரூபாயும் வழங்கப்பட்டது.
மேலும், நான்காவது மற்றும் ஐந்தாவது பரிசாக ஆயிரம் ரூபாயும் மற்றும்
சான்றிதழ்களையும்,மஞ்சப்பையும் வழங்கினர். மேலும், மாவட்ட அளவிலான
மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள்
வழங்கப்பட்டது.
—கு.பாலமுருகன்







