முக்கியச் செய்திகள் சினிமா

ஜெய்பீம்: சூர்யாவுக்கு அன்புமணி எழுதிய கடிதம்.

ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய்வழக்கில் கைது செய்யும் காவல் துறை அவரை அடித்தே கொலை செய்து அதனை மறைக்கிறது. இந்த உண்மையை வெளிக்கொண்டுவர வழக்கறிஞர் சந்துரு மேற்கொள்ளும் சட்ட முயற்சிகளே ஜெய்பீம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இத்திரைப்படத்தில் வன்னியர் சமூகம் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி, 9 கேள்விகளை எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜெய்பீம் திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கொடூர காவல் அதிகாரியாக நடித்திருப்பவர் வீட்டில் தொலைபேசும் காட்சியில் வன்னியர்களின் புனிதச் சின்னமான அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி வைக்கப்பட்டிருந்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜாக்கண்ணுவின் படுகொலைக்காக மற்ற கட்சிகளை இணைத்து முதலில் போராட்டம் நடத்தியது பாமகதான் என்ற அவர், அண்மைக்காலமாகவே தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயத்தை கொச்சைப் படுத்தும் வகையில் திரைப்படங்களை உருவாக்குவது வாடிக்கையாகி விட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “படைப்பாளிகளை விட ரசிகர்கள் தான் பெரியவர்கள். இந்தப் படத்தில் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும். இவை எதுவுமே தேவையில்லை. சூர்யா உண்மையானவராக இருந்தால், அனைத்து வினாக்களுக்கும் விடையளிப்பார் என நம்புகிறோம். அது தான் மக்களின் கோபத்தை தணிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியாகவே இருக்கட்டும்’ – வைரமுத்து

Arivazhagan Chinnasamy

சாத்தான்குளம் வழக்கு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Web Editor

நேபாளத்தில் புதிய பிரதமரை நியமனம் செய்த உச்சநீதிமன்றம்

Vandhana