மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதை அடுத்து மேற்கு தொடர்சி மலை பகுதி மற்றும் வட்டக்கானல் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கையின் நடுவில் வனத்துறையினரின் முழுக் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு மேற்கு தொடர்சி மலை பகுதி மற்றும் வட்டக்கானல் பகுதியில் கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக அனுமதிக்கபடாத நிலையில் தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டு உள்ளது. என்பது குறிபிடதக்கது.
இதனையடுத்து கும்பக்கரை அருவிப்பகுதியில் வனத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜன் தெரிவித்துள்ளார்.







